வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை ஆற்காடு சாலையில் உள்ள நியாயவிலைக் கடையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்காக தமிழக அரசால் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, சமையல் எண்ணை ஆகியவை பாதுகாப்பான முறையில் சமூக இடைவெளியில் நின்று பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
வேலூர் மாவட்டம் தொரப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக இயங்கும் உழவர் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்காக பாதுகாப்பான முறையில் சமூக இடைவெளியில் நின்று பொதுமக்கள் காய்கனிகள் வாங்க வரிசையில் நின்றனர். வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் செய்திமக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன வீடியோ படக்காட்சி வாகனம் மூலம் தமிழக அரசின் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வு படம் ஒளிபரப்பப்பட்டது. வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முக சுந்தரம். அவர்களிடம் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நிவாரண நிதியாக ரூ.2 லட்சத்து 5௦ ஆயிரத்திற்கான காசோலையினை இந்திய செஞ்சிலுவை சங்கம் வேலூர் கிளை சார்பில் அதன் செயலாளர் திரு.இந்தர்நாத் அவர்கள் வழங்கினார்கள். உடன் இந்திய செஞ்சிலுவை சங்க சேர்மன் திருமதி.பர்வதம், பொருளாளர் திரு.பாஸ்கர் உள்ளனர்.