கொரோனா நலத்திட்ட உதவிகள்.தென்காசி. திருநெல்வேலி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாநகர் மாவட்ட பொருளாளர் C. ஜோதிராஜ் தலைமையில் சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் இராம்குமரன் முன்னிலையில் கிளைக் கழக செயலாளர்கள், கழக உறுப்பினர்கள், நலிந்தோர்களுக்கு அரிசி பை நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டது. மாவட்ட கழக அம்மா தொழிற்சங்க இணை செயலாளர் R. முருகராஜ், கிளைக் கழக செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் கழக உறுப்பினர்களுக்கு அரிசி பை இலவசமாக வழங்கப்பட்டது. ஒருவருக்கொருவர் இடைவெளி ஏற்படுத்தி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. கழக உறுப்பினர்கள் அனைவரையும் முகக் கவசம் உபயோகித்து வீட்டிலேயே இருக்கும்படி அன்புடன் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு நிருபர். வே.மாரியப்பன். சங்கரன்கோவில் .