பழக இனிமையானவருக்கு பணி நிறைவு வாழ்த்துக்கள் !

பழக இனிமையானவருக்கு பணி நிறைவு வாழ்த்துக்கள் !


 அகில இந்திய வானொலியின் நேயர்கள் விரும்பும் ஆளுமைக்கு இன்று பணி நிறைவு நாள் ! நீடூழி வாழ அனைத்து செல்வங்களும் பெற்று உங்கள் குடும்பம் சிறக்க வாழ்த்துக்கள் அய்யா ! 


  நண்பர்களே அய்யா  பொன். தனபாலன் கொடைக்கானல்  பண்பலை வானொலியில்  பணியாற்றியபோது நிகழ்ச்சி தயாரிப்பாளர்  அய்யா  பொன். தனபாலன் அவர்களுடன் இனிமையான பழக்கம் ஏற்பட்டது . நேயர்களிடமும்,ஆளுமைகளிடமும் அன்னாரின்  கலந்துரையாடலும் , அன்பாக பேசும் தன்மையும் மறக்க முடியாத நிகழ்வுகள் . கேட்க,கேட்க ஆர்வத்தை ஏற்படுத்தும்.அதிகம் தொலைக்காட்சிகள் இடம் பிடிக்காத காலங்களில் கோடை பண்பலையில் மாமா,மாப்பிளை என்று தெறிக்கவிடும் கலந்துரையாடலுடன் அன்னாரின் குரல் மிக அருமை.வானொலியில் பல நாட்கள் அவருடைய தகவல்களை தொடர்ந்து கேட்டு வந்துள்ளேன் .மிகவும் இனிமையாகவும், விவசாயம் தொடர்பாக பல்வேறு தகவல்களை எடுத்து கூறுவதிலும் வல்லவராக இருந்துள்ளார்.


 நான் தலைமை ஆசிரியராக பணியாற்றும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு அய்யா  அவர்கள் குழுவுடன் கொடைக்கானலில் இருந்து வந்து ஒரு நாள் முழுவதும் எங்கள் பள்ளியில் இருந்து மழலையர்  நிகழ்ச்சிக்காக பல இளம் மாணவர்களை பேட்டி எடுத்து மிக அழகாக அதனை ஒளிபரப்பினார்கள். அது மறக்க முடியாத அனுபவமாக எங்களுக்கு அமைந்தது. அன்னார்  பேசும் போதும், பழகும் போதும் இனிமையாக பேசிப் பழகுவார்கள் .பிறகு கொடைக்கானலில் இருந்து அன்னார்  மதுரைவானொலி  நிலையத்திற்கு வந்த பிறகு நாற்றங்கால் பிரிவில் பணியாற்றுகையில்  சிறுவர் பூங்கா நிகழ்ச்சிக்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக எங்கள் பள்ளி மாணவர்களை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கி உதவியாக இருந்தார்கள். வானொலி நிலையத்திற்கு சென்ற பொழுதும், செல்வதற்கு முன்பாக தொலைபேசியில் அழைத்து பல்வேறு தகவல்களை கேட்கும்போதும் மிகவும் இனிமையாக அன்புடன் எங்களுக்கு பல்வேறு தகவல்களை எடுத்துக்கூறி நல்ல முறையில் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை கூறி எங்களுக்கு ஆதரவு தந்தார்கள்.அய்யா  அவர்கள் 32 வருடம் அகில இந்திய வானொலியிலும், எட்டு ஆண்டுகள் விவசாய துறையிலும் பணியாற்றி 31/ 3/ 2020 ஆகிய இன்று பணி நிறைவு பெறுகிறார்கள். கோயமுத்தூர், ஊட்டி, மதுரை ,கொடைக்கானல் ஆந்திரப் பிரதேசத்தில் கடப்பா ஆகிய இடங்களில் பணியாற்றி மிகவும் பேரும் பெருமையும் பெற்று பல நூறு ஆளுமைகளை வானொலி நிலையத்திலும் வெளி பகுதிகளிலும் பேட்டி எடுத்து இன்றுடன் அவர்கள் பணி நிறைவு பெறுகிறார்கள் .அன்னாரது வாழ்க்கை பணிநிறைவுக்கு பின்பும் மிக நல்ல விதமாக அமையவும்,இவ்வளவு பெருமைகளை அடைய அவருக்கு உதவியாக இருந்த அன்னாரது இல்லத்தரசிக்கும்,குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து எல்லாம் வல்ல இறைவன் அனைத்து பேறுகளையும் வழங்க பிரார்த்திக்கின்றேன். 


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்