திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக வாணியம்பாடி தாலுக்கா மற்றும் டவுன் பகுதிக் குட்பட்ட காவல்துறை நண்பர்களுக்கு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன் தலைமையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில். நகர காவல் ஆய் வாளர் திரு ராமச்சந்திரன், கிராமிய காவல் ஆய்வாளர் திருமதி மங்கையர்கரசி, மற்றும் உதவி காவல் ஆய்வாளர் காவலர்கள் ஆகியோருக்கு ஆலங்கா யம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி. M.D., அவர்கள் தலைமையிலான மருத்துவ குழு மிஸி Thermal scanner மூலம் 50க்கும் மேற்பட்ட காவல் துறை நண்பர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.