சங்கரன் கோவிலில் அரசு நிவாரணத் தொகை அமைச்சர் துவக்கி வைத்தார். தென்காசி. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 1000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அண்ணா நகர் தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு 1000 ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர் ராஜலட்சுமி துவக்கி வைத்தார்.அப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் படி பொதுமக்களிடம் அவர் கூறினார். சமூக இடைவெளியை கடை ஊழியர்கள் பின்பற்றி பொருட்களை வழங்க அமைச்சர் ஆலோசனை வழங்கினார். இதே போன்று சங்கரன்கோவில் ராஜபாளையம் ரோட்டில் உள்ள மொத்த கூட்டுறவு பண்டக சாலைக்கு அமைச்சர் ராஜலட்சுமி சென்று பொது மக்களுக்கு நிவாரண தொகை மற்றும் பொருட்களை வழங்கினார்