வேலூரில் பத்திரிகையாளர்களுக்கு ஏ.பி.நந்தகுமார் உதவி
வேலூரில் பத்திரிகையாளர்களுக்கு ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினார். தி.மு.க.தலைவர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கினங்க தி.மு.க வேலூர் மாவட்ட கழக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்றத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் கொரோனாவைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகாரணமாக வாழ்வாதாரம் இழுந்த ஏழை,எளியமக்களுக்கு தேடிசென்று அரிசி,மளிகை பொருட்களை வழங்கிவருகிறார். வேலூர்புதிய பேரூந்து நிலையம் அருகில் உள்ள அனுகூலஸில் சிறிய மகாலில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு மற்றும் ஊடக வியலாளர்களுக்கு | அரிசி,மளிகை பொருட்களை ஏ.பி.நந்தகுமார் சட்டமன்ற உறுப்பினர் அணைக்கட்டு தொகுதி அவர்கள் வழங்கினார்.