கோவையில் ஊழியர்கள் யாரும் இல்லாமல் கடை முன்பு வைத்து ‘பிரட்’டு களை பொதுமக்கள் அதற்குரிய பணத்தை போட்டுவிட்டு எடுத்து செல்கிறார்கள்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசின் உத்தரவை பொதுமக்கள் பின்பற்றி, சமூகவிலகலை கடைபிடித்து வருகிறார்கள். கோவை ரத்தினபுரியில் உள்ள மேம்பாலம் அருகே இருக்கும் இனிப்புக்கடை ஒன்று ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டு உள்ளது. இருப்பினும் அந்த கடை நிர்வாகத்தினர், பொதுமக்களுக்கு ‘பிரட்’ கிடைப்பதற்காக தங்களது கடை முன்பு மேஜை ஒன்றில் ‘பிரட்’ பாக்கெட்டுகளை அடுக்கி வைத்துள்ளனர். ஆனால் விற்பனை செய்ய ஆட்கள் யாரும் இல்லை. அதற்கு பதில் ‘பிரட்’ வைத்துள்ள பெட்டியின் அருகில் ஒரு அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர். அதில், இங்கு வைக்கப்பட்டு இருக்கும் ‘பிரட்’ டின் விலை ரூ.30 ஆகும். தேவை யான அளவுக்கு ‘பிரட்’டு களை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை அருகில் உள்ள பெட்டியில் போடவும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.  அந்த பகுதியில் உள்ளவர்கள் அந்த கடைக்கு வந்து அங்கு ‘பிரட்’டுகளை எடுத்துக் கொண்டு அதற்கான பணத்தை அருகில் உள்ள பெட்டியில் போட்டுவிட்டு செல்கிறார்கள். இது தொடர்பான வீடியோ வாட்ஸ் அப்பில் பரவியதால், அதைப்பார்த்த பல்வேறு தரப்பினர் நேர்மைக்கு இலக்கணமாக திகழும் கோவை மக்களுக்கும், கடை உரிமையாளரின் நம்பிக்கைக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.


 


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்