கோட்டாட்சியர் சே.கணேஷ், துணை ஆட்சியர் ஆ.காமராஜ் வழங்கினர்கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால் வருவாய் ஈட்ட முடியாத நிலையில் உள்ள குடும்பத்தினருக்கு கருணாலயா குழந்தைகள் காப்பகம், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் இணைந்து 10 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மிளகாய், உப்பு, புளி உள்ளிட்ட மளிகை பொருட்கள் ஒரு குடும்பத்தினருக்கு 1,250 மதிப்பீட்டில் 60 குடும்பத்தினருக்கு வழங்கும் நிகழ்வு காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வேலூர் வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் சங்க தலைவர் சே.கணேஷ் தலைமை தாங்கி கரோணா நிவாரண பொருட்களை வழங்கினார். முன்னதாக செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். வேலூர் துணை ஆட்சியர் ஆ.காமராஜ், கருணாலயா குழந்தைகள் காப்பகத்தின் இயக்குநர் கஸ்தூரிபால்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்பாடி வட்டாட்சியர் ஆர்.பாலமுருகன், அவைத்தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியன், துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், தாசில்தார்கள் எம்.குணசீலன், ராஜேஸ்வரி, மண்டல துணை வட்டாட்சியர் முரளிதரன், துணைவட்டாசியர் மகேஸ்வரி சித்ரா, வருவாய் ஆய்வாளர்கள் சிவக்குமார், செந்தாமரை, ஜனனி காட்பாடி ரெட்கிராஸ் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சிவவடிவு, ஆர்.ராதாகிருஷ்ணன், காந்திலால், பால்ராஜ், செ.ஜ.சோமசுந்தரம் பாரத சாரண சாரணீய அமைப்பின் மாவட்ட செயலாளர் எ.சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காட்பாடி ஜாப்ராபேட்டையில் உள்ள மினிஸ்டிரி ஆப் மெர்சி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், கருணாலயா குழந்தைகள் காப்பத்தின் குழந்தைகளுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மற்றும் சாலையோர ஆதரவற்ற குடும்பத்தினருக்கும் *மினிஸ்டிரி ஆப் மெர்சி, கருணாலயா குழந்தைகள் காப்பகமும் காட்பாடி ரெட்கிராஸ் சங்கமும் இணைந்து ரூபாய் 75ஆயிரம் மதிப்பீட்டிடல் அரிசி, பருப்பு, சர்கரை, சமையல் எண்ணெய், மிளகாய், உப்பு, புளி, கோதுமை மாவு, பிஸ்கட் ஒரு பேக்கட், மஞ்சள், மிளகாய், மாசால பொடி வகைகள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் ஒரு குடும்பத்தினருக்கு 1,250 மதிப்பீட்டில் 60 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.* காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 10 குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டது. மீதமுள்ள காட்பாடி வேலூர் பகுதியினை சுற்றியுள்ள குடும்பத்தினருக்கு அவர்களது வீட்டிற்கே சென்று அளிக்கப்பட்டது. மேலும் சாலையோரம் உள்ள குடும்பத்தினருக்கும் இருப்பிடத்திற்கே சென்று அளிக்கப்பட்டது. வருவாய் ஈட்ட முடியாத நிலையில் உள்ள குடும்பத்தினருக்கு கருணாலயா குழந்தைகள் காப்பகம், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் இணைந்து கரோனா நிவாரண பொருட்களாக அரிசி, பருப்பு, சர்கரை, உள்ளிட்ட மளிகை பொருட்களை குடும்பத்தினருக்கு கோட்டாட்சியர் சே.கணேஷ், துணை ஆட்சியர் ஆ.காமராஜ் வழங்கிய போது எடுத்தப்படம் உடன் கருணாலயா இயக்குநர் கஸ்தூரிபால்ராஜ், ரெட்கிராஸ் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், அவைத்தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியன், துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் ஆகியோர். சாலையோரம் வசிக்கும் குடும்பத்தினருக்கு கருணாலயா குழந்தைகள் காப்பகம், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் இணைந்து கரோனா நிவாரண பொருட்களாக அரிசி, பருப்பு, சர்கரை, உள்ளிட்ட மளிகை பொருட்களை குடும்பத்தினருக்கு கோட்டாட்சியர் சே.கணேஷ், வழங்கிய போது எடுத்தப்படம் உடன் கருணாலயா இயக்குநர் கஸ்தூரிபால்ராஜ், ரெட்கிராஸ் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், அவைத்தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியன், துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் ஆகியோர்.
கருணாலயா குழந்தைகள் காப்பகம், காட்பாடி ரெட்கிராஸ் இணைந்து 60 நலிந்த குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள்