கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி வீடு சேதம் 5 பேர் உயிர் தப்பினார்கள்
கூடலூர் அருகே உள்ள முதுமலை மசினகுடி ஹாவரல்லா பகுதியில் ஓடையில் 8 வயதுடைய ஆண் புலி ஒன்று கடந்த 13ம் தேதி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர்கள் பரிசோதனை செய்தார்கள் அழுகிய நிலையில் இருந்ததால் இறப்புக்கான காரணம் தெரியவில்லை அதனை தொடர்ந்து ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் மனோகரன் வன உயிரின ஆலோசகர் மோகன்ராஜ் ஊட்டி கல்லூரி உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழு விசாரணை செய்தது. இதனை தொடர்ந்து வெளி மண்டல துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் வனக்காப்பாளர் சசிதரன் வனக்காவலர் நாகபூஷணம் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார் இதனை தொடர்ந்து ரேஞ்சர் மாரியப்பன் வனவர் சித்தராஜ் ஆகியோரக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சில நாட்கள் ஆகி அது இறந்ததற்கான காரணம் தெரியாததால் வன ஊழியர்கள் கவனக்குறைவால் இச்செயல் நடை பெற்றுள்ளதாக இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.