ஏப்ரல் 5-ம் தேதி வீடுதோறும் விளக்கேற்றச் சொல்லியிருப்பது பலத்த விவாத அலைகளை எழுப்பியிருக்கிறது!

 நாட்டு மக்கள் அனைவரையும் கைதட்டச் சொல்லி உற்சாகப்படுத்திய பிரதமர் மோடி, இப்போது ஏப்ரல் 5-ம் தேதி வீடுதோறும் விளக்கேற்றச் சொல்லியிருப்பது பலத்த விவாத அலைகளை எழுப்பியிருக்கிறது!


கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு சிரமங்களுக்கிடையேயும் நாடு முழுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலகட்டத்தின் 10-வது நாளான இன்றைய சூழலில், நோய்த் தொற்று தீவிரமாகியிருப்பதோடு வீட்டுக்குள் அடைந்துகிடக்கும் மக்களுக்கு மன அழுத்தமும் அதிகரித்துவருகிறது. இதற்கிடையில், ஏற்கெனவே நாட்டின் பொருளாதாரம் சரிந்துவந்த சூழலில், தற்போதைய ஊரடங்கு உத்தரவு, ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் குழிதோண்டி புதைத்துவருகிறது.


மோடி 


இந்தச் சூழலில்தான், “கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்தும்விதமாக வருகிற 5-ம் தேதி இரவு 9 மணிக்கு, வீடுதோறும் மின் விளக்குகளை அணைத்துவிட்டு தீபம், டார்ச், செல்போன் லைட் வெளிச்சத்தை சுமார் 9 நிமிடங்களுக்கு ஒளிரவிட வேண்டும்” என்று நாட்டுமக்களுக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரதமர் மோடி.


இதுகுறித்துப் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், “நாடே இக்கட்டான சூழலில், தவித்துவரும் இந்த நிலையிலும்கூட தனிப்பட்ட தலைவராகத் தன்னை முன்னிறுத்துகிற அரசியலைத்தான் செய்துவருகிறார் நம் பிரதமர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், நாட்டு மக்கள் அனைவரும் இப்படி வரிசையில் காத்துக்கிடக்கிறார்களே என்று கேட்டால், `நாட்டு எல்லையில் ராணுவ வீரர்கள் காத்துக்கிடக்கிறார்கள்’ என்றார்கள்.


நாடே இடரில் இருக்கும்போது எந்தத் தலைவராக இருந்தாலும் ஆக்கபூர்வமான நடவடிக்கையைத்தான் எடுக்க வேண்டும். இல்லையென்றால் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். பொறுப்புமிக்க ஆபரேஷனின்போது, தவறாகச் செயல்படுபவரைக் கேள்வி கேட்காமல் இருந்துவிட முடியுமா. ஆனால், இப்போதும்கூட, `இது மக்களிடையே ஒரு கூட்டு உணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சி’ என்று சிலர் விளக்கம் கொடுப்பார்கள். இந்தக் கூட்டு உணர்வு என்பதும்கூட குறிப்பிட்ட ஒரு தலைவரை முன்னிறுத்தி அதை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கான ஒரு நிர்பந்தத்தை, மன அழுத்தத்தை உருவாக்குவதாகத்தானே இருக்கிறது!


ஒரு பேச்சாளர் அல்லது தலைவர் ஒரு விஷயத்தில் அனைவரின் கவனத்தையும் ஒட்டுமொத்தமாகக் குவிப்பதற்காக கைதட்டச் சொல்வார்கள். ஆனால், நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய ஒருவர், பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து அதைக் களைவதற்கான ஆயத்தப் பணிகளில் ஆக்கபூர்வமாகச் செயல்படுவதை விட்டுவிட்டு, இப்படி `கைதட்டுங்கள்; லைட் அடியுங்கள்’ என்றெல்லாம் சொல்வது… காமெடியாகத்தான் போய் முடியும்! ஏனெனில், இது நாட்டின் உண்மையான பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்கான ஒரு முயற்சி.


க.கனகராஜ் 


தேசம் இப்போது பேரிடரில் இருக்கிறது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதற்குத் தேவையான சுவாசக் கருவி, முகக் கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் நம்மிடம் இல்லை. ஆக, இதுகுறித்து மக்கள் யாரும் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இதுபோன்ற `தேச பக்தி’ அறிவிப்புகளை செய்துவிடுகிறார்கள். 


ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளைக்கூட, வென்டிலேட்டர் தயாரிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இப்படியான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் குறித்து நம் பிரதமர் எப்போதாவது முயற்சி செய்திருக்கிறாரா. அரசு மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் இல்லாத இந்தச் சூழலில், கொரோனா சிகிச்சைக்கென்று குறிப்பிட்ட நாள்களுக்கு தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறாரா?


நாடு இப்போதிருக்கும் சூழலில், பணம், மருத்துவ வசதிதான் அவசரத் தேவை. அடுத்ததாக, தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை உடனடியாகத் தயாரிப்பதற்கு வேறு தொழிற்சாலைகளையும்கூட பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி உணவுக்குக்கூட வழியில்லாமல் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியதிருக்கிறது. இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் பேச முன்வராத பிரதமர், வெறுமனே `கைதட்டுங்கள்; லைட் அடியுங்கள்’ என்றெல்லாம் மேம்போக்காக மட்டுமே பிரச்னையைக் கையாண்டு வருவதென்பது முழுக்க முழுக்க ப்யூர் பாலிடிக்ஸ்தான்.


தொழிற்சாலைகள் கதவடைப்பு என்பது முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்துவது. இதனால், கதவடைப்பு காலகட்டத்தில் எந்தவொரு பிரச்னையும் வராது. மாறாக, ஏதாவதொரு பிரச்னையினால் தொழிற்சாலை செயல்படாமல் முடங்கிப்போகும் சூழலும் ஏற்படும். இப்படியான காலகட்டத்தில், மூடப்பட்டதற்கான பிரச்னையோடு சேர்ந்து அடுத்தடுத்து எதிர்பாராத பிரச்னைகளும் வந்துசேரும். நாடு இப்போது இந்தச் சூழலில்தான் முடங்கிக் கிடக்கிறது.


தொழிலாளர்கள் 


முன்கூட்டியே திட்டமிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துகொண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாததால், சொந்த ஊர் செல்ல முடியாத ஏழை எளிய அடித்தட்டு மக்கள், கூட்டம் கூட்டமாக நடந்தே பயணிக்கிறார்கள். இன்றைய உணவுக்கு என்ன வழி என்பதுகூட தெரியாமல் திண்டாடிவரும் இந்தச் சமூகத்தைப் பற்றியெல்லாம் நம் பிரதமருக்கு எந்தக் கவலையும் இல்லை. பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் உயர் நிலையில் இருக்கக்கூடியவர்களைப் பற்றித்தான் நம் பிரதமருக்குக் கவலை. சுருக்கமாகச் சொன்னால், `குடிக்கக் கஞ்சி இல்லாதவனைப் பற்றி பிரதமருக்குக் கவலையில்லை; ஆனால், பாலுக்கு சீனி இல்லையே என்பவர்களுக்காக, கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.’ 


ஒட்டுமொத்தமாக நாட்டின் உண்மையான பிரச்னை என்னவென்று மக்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படிக் `கைதட்டு, லைட் அடி’ என்று பொழுதுபோக்குக் காட்டிவருகிறார் !” என்றார் காட்டமாக.


மத்திய அரசு மீதான எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் சீனிவாசனிடம் பேசியபோது, “வாசலுக்கு வந்து `அகல் விளக்கு ஏற்றுங்கள்’ என்று பிரதமர் சொல்லவில்லை. செல்போன் விளக்கை 9 நிமிடங்களுக்கு ஒளிரச் செய்யுங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார். அதுவும்கூட நாட்டு மக்களிடையேயான ஒற்றுமை உணர்வு, கூட்டு உணர்வை வெளிப்படுத்துகிற ஒரு உத்தியாகத்தான் இதைச் செய்யச் சொல்லியிருக்கிறார். மேலை நாட்டினர்கூட இதுபோன்ற விஷயங்களைச் செய்து வருகிறார்கள்தான். 


`உங்களின் ஊரடங்கு உத்தரவை ஏற்று நாங்கள் அனைவரும் உங்கள் பின்னால் இருக்கிறோம்’ என்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தலைவனுக்குத் தெரியப்படுத்த வேண்டாமா? நாட்டின் பிரதமர் ஆணைக்கு மக்கள் எந்தளவு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள் என்பதெல்லாம் தெரிய வேண்டாமா? ‘இதனால் என்ன நன்மை’ என்றெல்லாம் கேள்வி கேட்டால் என்ன சொல்வது?


சீனிவாசன் 


அடுத்து, ஊரடங்கு உத்தரவு என்பது திட்டமிடப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் `பந்த்’ போன்ற நிகழ்வு அல்ல. இது எதிர்பாராத சூழல். அப்படியிருக்கும்போது, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பிரச்னைகளையெல்லாம் தீர்த்துவைத்து அதன்பிறகுதான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. இதைத் திடீரென்றுதான் அறிவிக்க முடியும். அதன்பிறகுதான், பாதிக்கப்படுகிற மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்து பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். 


அந்தவகையில், உணவுத் தட்டுப்பாட்டை சரிசெய்வதற்கான ஆக்கபூர்வ பணிகளை மத்திய அரசு செய்துவருவதால்தான், மாநிலங்களில் ரேஷன் கடைகள் மூலமாக நிவாரணப் பொருள்கள் தடையின்றி கிடைத்து வருகின்றன. பால், தண்ணீர் மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகளுக்கு எந்தவிதத் தடையும் இல்லை. உண்மையிலேயே நாடு முழுக்க உணவின்றி தவிப்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பா.ஜ.க சார்பிலும் உணவு வசதிகளைச் செய்து தருகிறோம். தமிழ்நாட்டில் மட்டும் தினமும் ஒரு லட்சம் பேருக்கு உணவளித்து வருகிறோம். இதுதவிர, `ஃபேஸ் மாஸ்க்; ஃபேஸ் கொரோனா’ என்று சொல்லி பா.ஜ.க சார்பில், ஓர் இயக்கமே நடத்தி வருகிறோம்.


உலக நாடுகளோடு ஒப்பிடும்போது 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில், 3.4.2020 அன்று காலை நிலவரப்படி கொரோனா தொற்றுப் பாதிப்பு 2,000 பேர்களுக்குள்ளாக மட்டுமே இருக்கிறதென்பதே, மிகப்பெரிய சாதனைதான். அந்தளவு நிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறோம்.


கொரோனா வைரஸ் 


அதேசமயம் போர்க்கால நடவடிக்கையின் அடிப்படையில், `பேரிடர் கால நிவாரண நிதி’ அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் முகக் கவசம், கிருமிநாசினி தயாரிப்புப் பணிகளும் நாடு முழுக்க முடுக்கிவிடப்பட்டுள்ளன. தடுப்பு மருந்துகள் பற்றிய ஆராய்ச்சியும் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே இருக்கிற தடுப்பு மருந்துகளையேகூட கொரோனா தடுப்பு மருந்தாகப் பயன்படுத்த முடியுமா என்றும் ஐ.சி.எம்.ஆர் மருத்துவர்கள் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். எந்த நாட்டிலும் இல்லாத புதுமையாக, ரயில் பெட்டிகளையே மருத்துவ வார்டாக மாற்றித் தயார் நிலையில் வைத்திருக்கிறோம். இவையெல்லாவற்றையும் தவிர வேறு என்னென்ன ஆக்கபூர்வ நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாம் என எதிர்க்கட்சிகளும்கூட ஆலோசனை தரலாமே… செயல்படுத்த தயாராகவே இருக்கிறது” என்றார் தெளிவாக.


கருத்துகள்
Popular posts
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்