தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சியில் உள்ள 15வது வார்டு பகுதி கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் கட்டுப்படுத்தும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு இதனை சுற்றுயுள்ள அனைத்து வீடுகளிலும் சுகாதாரத்துறை, வருவாய் துறை, வளர்ச்சி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து வீடுகள் தோறும் ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் மற்றும் அனைத்து வீடுகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கும் | பணிகள் குறித்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி ஊராட்சி | ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபாகணிகர், கூடுதல் இயக்குநர் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.நா.அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.திவாகர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் திரு.அசோக்குமார், உதவி இயக்குநர் ஊராட்சிகள் திரு.கோபிநாத் ஆகியோர் உள்ளனர்கள்