முன்னால் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி ஏழைகளுக்கு 40 டன் இலவசகாய்கறிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவ மனையில் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா தனி வார்டு அமைக்கப் பட்டுள்ளது. இந்த வார்டை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் அவர்கள் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, ஓசூர் காவேரி மருத்துவமனை இயக்குனர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட டாக்டர்கள் உடன் இருந்தனர். பின்னர் நம்மமிடையே பேசிய மாவட்ட ஆட்சியர்: கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவ மனைகளில் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. ஓசூர் தொழிற்சங்க கூட்டமைப் பினரின் ரூ. 112 கோடி நிதியில், ஓசூர் இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் வெண்டிலேட்டர், ஐ.சி.யூ. உள்ளிட்ட வசதிகளும், உபகரணங்களும் பெறப் பட்டு 50 படுக்கை வசதிகளுடன் கூடிய தனி வார்டு தயார் நிலையில் உள்ளது. ஓசூர் வெக்டார் கண்ட்ரோல் இன்ஸ்டிடியூட் மையத்தில் கொரோனா ரத்த மாதிரிகள் பரிசோதனை மையம் விரைவில் செயல்பட உள்ளது.