சென்னை உயர்நீதிமன்ற ' பதிவாளர் அறிவிப்பு
ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீதிமன்ற பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார். கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கத்தில், நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் தேசிய ஊரடங்கு முடிவுக்கு வர உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீதிமன்ற பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார். காணொலி காட்சி மூலம் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.