தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள திருவேங்கடத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் சுமித்ரா தம்பதியினரின் ஒரே ஒரு மகளான கார்த்திகாயினி அதே பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் இன்று பிறந்தநாளை நண்பர்களோடு கோலகலமாக கொண்டாட நினைத்த கார்த்திகாயினி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்க்காக சேமித்த ரூபாய் 2400 உண்டியல் பணம் மற்றும் பெற்றோர்கள் தனக்கு பரிசு பொருள் வாங்க வைத்திருந்த ரூபாயாய் 5000த்தையும் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு திருவேங்கடம் தாசில்தார் சுப்பிரமணியனிடம் கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்வடைய வைத்தது.