கிருஷ்ணகிரியில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த 1000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய திமுக மாநில விவசாய அணி துணை தலைவர் திரு.D.மதியழகன் அவர்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வண்ணம் 144 தடை உத்தரவினால் தினகூலிக்கு செல்லும் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் முற்றிலும் வருமானமின்றி வீட்டில் உணவுக்கு பஞ்சம் நடமாடும் அளவுக்கு சூழ்நிலை மோசமாகியுள்ளது இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது கட்சியினரிடம் மக்களுக்கு உதவும்படி உத்தரவிட்டார். இந்த உத்தரவை பின்பற்றி கிருஷ்ணகிரியின் திமுக மாநில விவசாய அணி துணை தலைவர் திரு. D. மதியழகன் அவர்கள் கிருஷ்ணகிரி ஒன்றியம் வெங்கடாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சுமார் 1000 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அரிசி, துவரம் பருப்பு, சமையல்எண்ணெய், சர்க்கரை மற்றும் முக கவசங்கள் ஆகியவை கொடுத்து உதவினார். மேலும் ஒரு குடும்பத்திற்கு நூறு ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. இந்த நிவாரணம் வழங்கும் நிகழ்வில் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.