வேலூரில் நடைபாதையில் தர்பூசணி முலாம் பழம் விற்கும் வியாபாரிகள் கொரோனா ஊரடங்கால் கடை வைக்க முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருந்தார்கள். அவரிகளிடம் மொத்தமாக பழங்களை விலைக்கு வாங்கி வேலூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனாவா இருக்கும் இடங்களிலும் தைரியத்தோடு கடும் வெயிலும் பொருட்படுத்தாமல் தூய்மை பணி செய்பவர்களை குளிர்விக்கும் நோக்கில் 100 பேருக்கு தலா ஒரு தர்பூசணி, ஒரு முலாம் பழம் என 100 தர்பூசணி, 100 முலாம் பழம் வேலூர் மாநகராட்சி மண்டலம் 2 உதவி ஆணையாளர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் இரண்டாம் மண்டலம் முன்னிலையில் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் வழங்கினார்.