குற்றாலம் அருகே பூட்டிய வீட்டுக்குள் ஆண் பிணம். போலீஸார் விசாரணை.
தென்காசி, குற்றாலம் அருகே உள்ள மேலகரம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர கந்தன் (வயது 55).இவருக்கும், மனைவிக்கும் விவாகரத்து ஏற்பட்டு 18 ஆண்டுகள் ஆகிறது. இவரது மகன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டின் கீழ் தளத்தில் வாடகைக்கு வசித்து வந்தவர், மாடியில் துர்நாற்றம் வீசுவதாக தென்காசியில் வசித்துவரும் சங்கர கந்தனின் சகோதரர் ரெங்கராஜுவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் விரைந்து சென்று பார்த்தபோது, சங்கர கந்தன் பிணமாக கிடந்துள்ளார் மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து குற்றாலம் போலீசில் ரெங்கராஜு புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிஷாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த சங்கரகந்தன் வலிப்பு நோய் மற்றும் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நோயால் அவர் இறந்தாரா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.