சுரண்டையில் அன்பழகனுக்கு அஞ்சலி. திமுகவினர் மௌன ஊர்வலம். சுரண்டை , திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கடந்த 7ஆம் தேதி அதிகாலையில் காலமானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுரண்டை நகர திமுக மற்றும் கீழப்பாவூர் ஒன்றிய திமுக சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. சுரண்டை அண்ணா சிலையில் இருந்து பஸ் ரோடு வழியாக பாவூர்சத்திரம் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் முடிவடைந்தது. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு சேக் முகமது, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகச்சாமி, அவைத் தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் ஜெயராஜ், துணைச் செயலாளர்கள் சங்கரநயினார், பாண்டியன் இளைஞரணி சுப்பிரமணியம் மற்றும் திமுக நிர்வாகிகள் தனலட்சுமி, கணேசன், ராஜேந்திரன், சங்கரபாண்டியன், சார்லஸ், உன்வேலன், அரவிந்தசாமி,மாரி. பேச்சாளர் ஞானசீலன். சாமுவேல்மனோகர், முத்து சுப்பிரமணியம், பவுன்ராஜ், டிஜிட்டல் மாடசாமி, பசுபதி, லட்சுமணன், குமார், தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்து இரங்கல் தெரிவித்தனர்.
சுரண்டையில் அன்பழகனுக்கு அஞ்சலி. திமுகவினர் மௌன ஊர்வலம்