திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியில் ஊராட்சி செயலாளர் பாண்டியன் என்பவர் 100 நாள் வேலை திட்டம் மற்றும் பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டு உள்ளதாக கூறி அப்பகுதி மக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வந்த கிராமிய காவல்துறை உதவி ஆய்வாளர் ரஞ்சித் வருவாய் அலுவலர் மற்றும் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் சம்பந்தப்பட்டவர் மீது புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதின் பேரில் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.
வாணியம்பாடி அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் ஊராட்சி செயலாளர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கோரி சாலை மறியல்