மக்கள் நலனை காக்க அதிகாரிகள் குடிநீர் தயாரிக் கும் நிறுவனங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மனிதன் உயிர்வாழ உணவு எவ்வளவு அவசியமோ அதைவிட சுத்தமான குடிநீர் அவசிய மானது. நீரானது மனித உடலில் நடை பெறும் வளர்சிதை மாற்றங்கள் மற்றும் உடலில் நடைபெற்ற வளர்சிதை மாற்றங்களால் ஏற்படும் கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கியபங்கு வகிக்கிறது. நீரின் அருமையை அறிந்த முன்னோர்கள் பின்வரும் தலைமுறைக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க உறுதி செய்யும் வகையில் அப்பகுதியில் ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா 4 முதல் 10 குடிநீர் ஊரணியை அமைத்து பாதுகாத்து வந்தனர். அவ்வாறு அமைக்கப் பட்ட ஊரணிக்கு மழைநீர் வர மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்து நீர் வரத்துவாரிகள் அமைத்து ஊரணியில் சேகரித்த நீரை குடிநீராக பயன்படுத்தினர். இந் நிலையில் நகரமயமாதல், சுற்றுசூழல் மாசுபாடு, மக்கள் தொகை பெருக்கம் காரணமாக கிராமம், நகரம் என பாகுபாடின்றி அனைத்து பகுதிகளிலும் மாசு அடைய தொடங்கியது. இதனால் குடி நீருக்காக பயன் படுத்திய பெரும்பாலான ஊரணிகள் குளிக்க பயன் படுத்தப் பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக மழை யளவு குறைந்து, கண்மாய், ஊரணிகள் வறண்டு நீரின்றி காணப்படுகிறது. இதனால் குடிப்பதற்கு பயன்படுத்தும் குடிநீருக்காக பொதுமக்கள் வீதி வீதியாக அலைய வேண்டி உள்ளது. இந்நிலை யில் மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி புற்றீசல் போல் முளைத் துள்ள குடிநீர்தயாரிக்கும் தொழிற்சாலைகள் பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்களில் நீரை அடைத்து நகர்புறங்களில் விற்பனை செய்து வந்தனர். இந்நிலை யில் தற்போது சிறிது சிறிதாக கிராமத்திற்குள்ளும் நுழைய விட்டுள்ளனர். நீர்நிலைகள் வறண்டநிலை யில் மக்களும் வேறு வழியின்றி கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை குடிக்க பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தேவை அதிகமானதால் குடிநீர் அதிகமானதால் குடிநீர் தயாரிக்கும் தொழிற் சாலைகள் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே தொழிற்சாலைகள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வினியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது தானா என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து குடிநீர் தயாரிக்கும் தொழிற் சாலையில் வேலைசெய்யும் ஒருவர் கூறுகையில், முதலில் ஆழ்துளை கிணற்றிலிருந்து ராட்சத மோட்டார் கொண்டு தொட் டியில் நீர்சேகரிக்கப்படுகிறது. பின்னர் நீரின் தன்மைக்கு ஏற்ப அதில் குளோரின் பவுடர் சேர்க்கப்படும். இதனை தொடர்ந்து நீரானது கார்பன் வடிகட்டிக் குள் சென்று தொடர்ந்து மணல் வடிகட்டியை சென் றடையும். இந்த செய்முறை யில் பெரும்பாலும் நீர்சுத்தமடைந்து விடும். இருந்த போதிலும் தொடர்ந்து கடைசியாக பில்டர்மெம்ரேன் மூலம் வடிகட்டப்பட்டு பாட்டிலில் நீர் நிரப்பும் அறைக்கு செல்லும். அங்கு நீர் கதிர்வீச்சு முறைக்கு உட்படுத்தப்பட்டு கிருமிகள் அழிக்கப்பட்டு பாட்டிலில் நீர் நிரப்பப்பட்டு விற்பனைக்கு அனுப்பப் படும். இது பெரும்பாலும் எல்லா குடிநீர்நிறுவனங் களிலம் ந களிலும் நடக்கும் செயல் முறையாகும். இதில் கார்பன், மணல், மெம்ரேன் பில்டர்கள் அடிக்கடி மாசடைந்துவிடும். அதிகபட்சமாக 6 மாதத் திற்கு ஒருமுறை இந்த பில்டர்கள் மாற்றவேண்டும். ஆனால் பெரும்பாலான குடிநீர் தயாரிக்கும் நிறு வனங்கள் செலவு அதிகமாகும் என்பதற்காக இதனை ஒன்றறை வருடம் வரை மாற்றாமல் பயன்படுத்த கூடும். மேலும் நீரின் சுத்தத்திற்காக அதிகளவு குளோரின் பவுடர், சுவைக்காக பிஎச் பூஸ்டர்சேர்க்கப்படும். இதனிடையே பாட்டிலில் நிரப்பப்படும் குடி நீர் கார்பன், மணல் வடிகட்டு தலுக்கு மட்டுமே உட்படுத்தப்படும். காரணம் பாட்டிலில் குறைந்த விலையில் கிடைப்பதால் அதன் சுவை பற்றி யாரும் குறை கூறுவதில்லை. மேலும் பாட்டில் குடிநீரை நடுத்தர மக்களும், மது குடிப்ப வர்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். சிலசமயம் அதிகளவில் குடிநீர்ஆர்டர்வரும் போது சில நிறுவனங்கள் முறை கேட்டில் ஈடுபடவாய்ப்புள் ளது என்றார். இது பற்றி அரசு மருத்துவரிடம் கேட்டபோது: தொழிற்சாலை தயாரிப்பு என்றால் அங்கு தயாரிக்கப் படும் பொருட் கள் அனைத் தும் வேதி வினைக்குட் படுத்தப்படுவது வழக்கம். மற்ற பொருட்களை விட நீர் உடலில் எளிதில் வினைபட கூடியது. இதனால் நீரில் கலந்திருக்கும் வேதி பொருட்கள் எளிதாக உடலின் அனைத்து பாகங் களுக்கு சென்றடையும். அப்படிப்பட்ட நீர்சுத்த மாகவும், பாதுகாப்பான தாகவும் இருப்பதை அரசு உறுதிப்படுத்தவேண்டும். மேலும் இயற்கையாக கிடைக்கும் நீரைசுவைக்கா வேதிபொருட்கள் கலப்பதால் நீரில் இயற்கை யாக உள்ள மினரல்ஸ் அழிந்து விடும். குளிர் பானங்கள் எவ்வாறு உடலுக்கு தீங்குவிளைவிக் கும் என கூறிவருகிறோமோ அது போலவே வேதி பொருள்கள் கலந்த நீரும் உடலுக்கு தீங்கு விளைவிக் கும். ஊரணி நீரை ஒரே நேரத்தில் ஒருலிட்டர் குடிக்கும் கிராமவாசிகள் பாட்டில் அடைக்கப்பட்ட நிறுவனதயாரிப்பு நீரை அவ்வாறுகுடிக்கமுடியாது. ஏனென்றால் இதில் கலந்துள்ள வேதிபொருட் கள் எளிதில் தாகம் தீர்ப்பது போல் மாயை ஏற்படுத்தி குடலை மந்தமாக்கி விடும். ஆனால் மீண்டும் தாகம் எடுக்கும். ஒருசிலருக்கு பாட்டில், பாக்கெட் குடி நீர் ஒவ்வாமையை ஏற்படுத்த கூடும் இதற்கு வேதி பொருட்களே காரணம். எனவே நிறுவனம் தயாரிக் கும் குடிநீர் சுத்தமானது தான் பாதுகாப்பானது தான என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவது அதிகாரிகளின் கடமையா கும். மேலும் பொதுமக்கள் வீட்டின் அருகிலே கிடைக் கும் காவிரி,கிணறு நீரை நன்கு கொதிக்க வைத்து, குளிர செய்து வடிகட்டி குடிப்பதே சிறந்தது என்றார்.
குடிநீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி சிறிது சிறிதாக கிராமத்திற்குள் நுழையும் பிளாஸ்டிக் கேன், பாட்டில் குடிநீர்