தென்காசியில் இலவச வீட்டு மனை பட்டா. தென்காசியில் மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சி தலைவர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கினார். அலுவலர் கல்பனா, கோட்டாச்சி தலைவர் பழனி குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மரகத நாதன், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினார். கூட்டத்தில் தென்காசி வட்டம் கடையம் குறுவட்டத்தை சேர்ந்த 11 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார்.
தென்காசியில் இலவச வீட்டு மனை பட்டா