குற்றாலத்தில் வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்ட

குற்றாலத்தில் வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில், வார்டுகளை பிரிப்பதில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத் தினர். கருத்துகேட்பு கூட்டம் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய விதிகளின்படி 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 நகரசபைகளில் அடங்கும் 153 வார்டுகள், 18 நகர பஞ்சாயத்துகளில் அடங்கும் 278 வார்டுகள், 10 பஞ்சாயத்து யூனியனில் உள்ள 1905 கிராம ஊராட்சி வார்டுகள், 144 ஒன்றிய வார்டுகள், 14 மாவட்ட ஊராட்சி வார்டுகள் ஆகியவற்றில் வார்டு மறு வரையறை செய்யப்பட்டது. இதில் உள்ள கருத்துகள் குறித்து கடந்த 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. குற்றாலம் நகர பஞ்சாயத்து சமுதாய கூடத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கினார். முறையான பட்டியல் கூட்டத்தில் முகம்மது அபுபக்கர் எம். எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் பழனி நாடார், ம.தி.மு.க. மாவட்ட செய லாளர் தி.மு. ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள் கூறுகையில், வார்டுகளை பிரிப்பதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அவற்றை சரிசெய்ய வேண்டும். உதாரணமாக 3000 வாக்காளர்கள் உள்ள வார்டை பிரித்து 400 வாக்கா ளர்களாக மாற்றியுள்ளனர். சாதி, மத அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டி ருக்கும் இதனை சீர் செய்து முறையான பட்டியல் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்