ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு. இளநீர் பறித்தபோது பரிதாபம்




ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு. இளநீர் பறித்தபோது பரிதாபம். ஆலங்குளம், மார்ச்.12- மின்சாரம் தாக்கி  தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மரம் ஏறும் தொழிலாளி. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வேதம்புதூரை சேர்ந்தவர் நடராஜன். அவருடைய மகன் சீனி செல்வகுமார் (வயது 32). மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று காலை ஆலங்குளத்தை அடுத்த அத்தியூத்து அருகே உள்ள தனியார் தோட்டத்தில் தென்னை மரம் ஏறி இளநீர் பறித்துக் கொண்டிருந்தார். பின்னர் மரத்தில் இருந்து கீழே இறங்க முயன்றபோது மரத்தின் அருகே சென்ற மின்சாரம் கம்பி மீது அவரது கை பட்டது. இதனால் அவர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இதில் சீனி செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பெருத்த சோகம். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.  பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சீனி செல்வகுமாருக்கு திருமணம் முடிந்து மனைவியும், குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இளநீர் பறித்தபோது தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த  பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 



 



கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்