தென்காசியில் ஊட்டச்சத்து உறுதிமொழி ஏற்பு. தென்காசியில் தென்காசி மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊட்டச்சத்து இரு வார நிகழ்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அருள் சுந்தர் தயாளன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை குறைப்பதற்கு போஷான் அபியான் ஊட்டச்சத்து வார நிகழ்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார குழந்தைகள், வளர்ச்சி திட்ட அலுவலர் தான்யா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
தென்காசியில் ஊட்டச்சத்து உறுதிமொழி ஏற்பு