தென்காசியில் கொரோனோ விழிப்புணர்வு நிகழ்ச்சி. தென்காசியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கை கழுவும் முறைகள் குறித்த தலைவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கினார். கொரோனோ வைரஸ் அறிகுறிகள் அது தாக்கும் முறைகளும் அதனை கட்டுப்படுத்த சிகிச்சை அளிக்க மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்றவை இதன் அறிகுறிகள். இவை காணப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கைகளை சோப்பு போட்டு எவ்வாறு சுத்தமாக கழுவ வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, நலப்பணிகள் துணை இயக்குனரின் தொழில்நுட்பம் நேர்முக உதவியாளர் ரகுபதி, கோட்டாட்சி தலைவர் பழனிகுமார், அரசு துறை அலுவலர்கள், உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தென்காசியில் கொரோனோ விழிப்புணர்வு நிகழ்ச்சி