லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அல்லது வழக்கு தொடர அனுமதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் வழங்கப் படாது,' என்று மத்திய அரசு அறிவித்துள் ளது. மத்திய அரசு பணியாளர்கள் தொடர்பாக ஏற்கனவே உள்ள வழிகாட்டுதலை மத்திய பணியாளர்கள் அமைச்சகம் மறு ஆய்வு செய்தது. இதில், மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம், வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர். அதன் பிறகு. அனைத்து மத்திய அரசுத்துறை செய லாளர்களுக்கும் மத்திய பணியாளர் நல அமைச் சகம் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்ப இருந்தாலோ தாவது: அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்வதற்கு தேவையான பாஸ்போர்ட் பெறுவதற்கு லஞ்ச ஒழிப்புத்துறையின்எ ஒப்புதல் அவசியம். எனவே, அரசு ஊழியர்கள் மீது நீதிமன்றத்தில் புலனாய்வு அமைப்புகள் கிரிமினல் வழக்கு தொடர்ந்து குற்றப்பத் திரிகை தாக்கல் செய் திருந்தாலோ அல்லது அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தாலோ அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதை லஞ்ச ஒழிப்பு துறையால் நிறுத்திவைக்க முடியும். னவே, அரசு ஊழியர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு தேவை யான அனுமதியை லஞ்ச ஒழிப்புத் துறை நிறுத்தி வைக்கலாம். லஞ்ச ஒழிப்பு தடுப்பு சட்டத்தின்படி இந்த நடவடிக்கையை சம்பந்தப்பட்ட நிர்வாகம் மேற்கொள்ளலாம். குற்ற வழக்கு பதியப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் வெளிநாட்டில் தங்குவதால் இந்தியா உடனான நட்புக்கு பாதிப்பு ஏற்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருதினால், பாஸ்போர்ட்டை நிறுத்தி வைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஊழல், லஞ்சவழக்குகளில் சிக்கும் அரசு அதிகாரிகள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பி விடுகின்றனர். பிறகு, அவர்களை நாடு கடத்தி வருவது அரசுக்கு பெரிய தலைவலியாகி விடுகிறது. அதை தடுக்கவே, இந்த அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
நாட்டை விட்டு ஓடுவதை தடுக்க ஊழல் ஊழியர்களுக்கு இனி பாஸ்போர்ட் கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு