நாய்க்கடிக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? தென்காசி, சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாய்கள் அதிகமாக தெருக்களில் சுற்றித் திரிகிறது. பல இடங்களில் பொதுமக்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும் கடித்து சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் விஷமுறிவு ஊசி தொடர்ந்து 4 முறை டாக்டர்கள் போடச்சொல்லி சுமார் 400 நபர்களுக்கு மேலாக சுகாதாரத்துறையில் அரசு பதிவு பெற்று சிகிச்சையில் (வெளி நோயாளியாக) இருக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயமாகும். எனவே நகராட்சி நிர்வாகம் நாய்கள் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பாக பலமுறை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆதங்கப்படுகிறார்கள். எனவே மேற்கண்ட பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பாக வேண்டுகிறோம்.
நாய்க்கடிக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?