விழுப்புரத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 673 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் விழுப்புரம் தனியார் கல்லூரி வளாகத்தில், நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 63 முன்னணி தனியார் நிறுவனங்களை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு 3,187 பேரிடம் நேர்காணல் நடத்தி, 673 பேரை தேர்வு செய்தனர். இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட வர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை பணி நியமன ஆணையை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக அரசு படித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தனி யார் துறை நிறுவனங்கள் ஒருங்கி ணைந்து வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன. அதன் அடிப்படையில் விழுப்புரத்தில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 673 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 289 பேர் முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டாம் கட்ட தேர்வுக்கு சென்று உள்ளனர். எனவே இது போன்ற வேலை வாய்ப்பு முகாமை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ் வாறு அவர் பேசினார். முன் ன தாக வேலைவாய்ப்பு முகாமை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். இதில் விழுப்புரம் மண்டல இணை இயக்குனர் அலுவலர் சந்திரன், மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குனர் பாலமுருகன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் ஈஸ்வரன், விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்