பொதுமேடையில் பாகிஸ்தானை வாழ்த்தி முழக்கமிட்ட மாணவியின் காவல் நீட்டிப்புபொதுமேடையில் பாகிஸ்தானை வாழ்த்தி முழக்கமிட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ள கல்லூரி மாணவி அமுல்யா லியோனாவின் காவலை வரும் 5ஆம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. பிப்ரவரி 20ஆம் தேதி பெங்களூரில் மஜ்லிஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கல்லூரி மாணவி அமுல்யா லியோனா, பாகிஸ்தானை வாழ்த்தி முழக்கமிட்டார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த ஓவைசி அந்தப் பெண்ணிடம் இருந்த மைக்கைப் பறித்துக் கொண்டார். காவல்துறையினர் மேடையில் இருந்து அவரை வெளியேற்றியதுடன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். அவருக்குத் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமுல்யா லியோனாவின் காவலை வரும் 5ஆம் தேதி வரை நீட்டித்து பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்