| கல்லூரி மாணவிகளின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து டிக் டாக் வீடியோ பதிவேற்றம் செய்தவர் கைது இரு செல்போன், மெமரி கார்டுகள் பறிமுதல் சுரண்டை அருகே பரபரப்பு

இரு செல்போன் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கல்லூரி மாணவிகளின் போட்டோக் களை ஆபாசமாக மார்பிங் செய்தும், ஆபாசமாக டிக்டாக் செய்து வீடியோ பதிவேற்றம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து இரு ஸ்மார்ட் செல் போன்கள், மெமரி கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெருகும் சமூக குற்றங் களை தடுப்பதற்காக டிக்கை தடைசெய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு பெரும்பாலானோர் கோரிக்கை வைத்திருந்தனர். டிக்டாக் செய்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அதைப்பார்த்து ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மாணவர்கள் எல்லை மீறி சில பெண்களை வீடியோ எடுத்து அவர்க ளுக்கு தெரியாமல் டிக் டாக் செய்து பதிவேற்றம் செய்த சம்பவங்களும் நடந் துள்ளது . கல்லூரி மாணவி கள், இளம் பெண்களையும் ஆபாசமாக டிக்டக் பதி வேற்றம் செய்ததாக, அவர்களின் போட்டோக் களை ஆபாசமாக மார்பிங் செய்துள்ளதாகவும் சுரண்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர் கைது செய்யப் பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கூலிபத்து அருணா சலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (19). இவர் ஒன்பதாம் வகுப்பு வரை படித்து விட்டு மேற்கொண்டு பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்கு செல்லாமலும் ஊரை சுற்றி வருகிறார். இவர் காதல் மன்னன் கண்ணன் என்ற பெயரில் டிக்டாக்கில் பிரபலம். இதுவரை 947 வீடியோக்கள் பதிவேற்றம் செய்த கண்ணனுக்கு 4.18 லட்சம் பாலோயர்கள் உள்ளனர். இதனால் இவரது வீடியோக்களுக்கு ஆயிரக்கணக்கில் லைக்கு கள் கிடைத்தன. இதுவரை மொத்தம் 1.37 கோடி ம 1.37 கோடி லைக்குகள் இவரது வீடி யோக்களுக்கு கிடைத் துள்ளது. இதனால் உற்சாக மான கண்ணன் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் தென்காசி அருகே தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருவதாக வும் பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளை போன்று தினமும் டிப்டாப்பாக ஆ ைட க ளை அணிந்தும்,செயலாகவும் இனிக்க ,இனிக்க பேசியும் பசியும் பல கல்லூரி மாணவிகளிடம் பழகி. மக்டாக் வீடியோவில் நடித்த அவர்களிடம் நெருங்கி பழகி உள்ளார். இதனை பயன்படுத்தி எந்த மாணவிக்கும் சந் தேகம் வராமலம் 15க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் தனித்தனியாக சந்தித்து ஆசை வார்த்தை கூறி காதல் வலையில் வீழ்த்திய சில் மாணவிகளிடம் நட்பு பாராட்டி வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இவர் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளிடம் செல்பி வீடியோ எடுத்துள்ளார். இதனிடையே கண்ணனும் அவரது இரு நண்பர்களும் ஆடம்பரமாக வாழ்வதற்கு ஆசைப்பட்டனர். இதனை அடுத்து கண்ணனின் மாணவிகள் மற்றும் கிருமணமான இளம் பெண் களின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து அகம் அதனை அவ்வப்போது ரசித்து பார்த்து வந்துள்ளார் . மேலும் சில பணக்கார மாணவிகள் மற்றும் திருமணமான இளம் பெண்களின் போட்டோக் களை ஆபாசமாக மார்பிங் செய்து அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி சிலரிடம் ஏராளமான பணத்தை கறந்துள்ளார். இதில் பணம் தராத சில இளம் பெண் க ளின் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட போட்டோக் களை வெளியிட்டு உள்ள தாகவும் கூறப்படுகிறது. இந்த வாலிபரின் வலையில் சில தொழிலதிபர்கள் மற்றும் சில அரசு அதிகாரி களின் மகள்களும் சிக்கி யுள்ளதாக கூறப்படுகிறது. கண்ணனின் மிரட்டலுக்கு பயந்த சில மாணவிகள் பணத்திற்கு பதிலாக தங்களிடம் இருந்த தங்க மோதிரம் வளையல்களைக் கழற்றிக் கொடுத்துவிட்டு பெற்றோரிடம் தங்க நகை கள் தொலைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் ஓரிரு மாணவி களின் குட்டு பெற்றோர் களுக்கு தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். சில பெற்றோர் தங்களது மகள்களின் எதிர்கால வாழ்க்கை எண்ணிபோலீசில் புகார் அளிக்க முன்வரவில்லை. ஆனால் கண்ணனின் மிரட்டல் அதிகரித்துக் கொண்டே சென்றதால் வேறுவழியின்றி தென்காசி எஸ்பி சுகுணா சிங்கிடம் புகார் மனு அளித் தனர். இதனை அடுத்து அவரது உத்தரவின் பெய ரில் புளியங்குடி டிஎஸ்பி சக்திவேல் ,சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சைக்கிள் தினேஷ்பாபு மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கண் ணனை கைது செய்தனர். அவரிடமிருந்து ஸ்மார்ட் செல்போன்கள், மெமரி கார்டுகள், பென்டிரைவ் ஆகாயவறறை பறிமுதல் செய்து, மிரட்டி பணம் பறித்தல் ,மிர தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் , பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டதை அறிந்து அவரது இரு நண்பர்கள் தலைமறைவாகி விட்டனர் அவர்களையும் கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இதில் கண்ணனின் தம்பியும் டிக் டாக் மோகத்தில் சிக்கி உள்ளார். இவரது சதித் திட்டங்களுக்கு அவரது தம்பியும் உடந்தையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்