டிரைவர்களிடம் வசூல் வேட்டை நடத்திய பெரம்பலூர் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் டிரைவர்களை மிரட்டி வசூல் வேட்டை நடத்தி வருவதாக 3 நிமிடம் 7 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ பதிவு கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோவில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீப்பின் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு, லாரியில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் சென்ற டிரைவர்களிடம், அதற்கான அபராத தொகையை விதிப்பதாக இழுத்தடித்து, லஞ்சமாக பணத்தை கொடுத்து விட்டு செல்லுமாறும், இல்லையென்றால் வழக்கு போடப்படும் என்று வாகன ஓட்டிகளை மிரட்டுவதும், இதனால் டிரைவர்கள் தங்களிடம் இருந்த பணத்தை அந்த இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விட்டு செல்வதும் வீடியோ காட்சியில் பதிவாகியிருந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் அந்த வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், அதில் இருப்பவர் பெரம்பலூர் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த விசாரணை அறிக்கையை திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணனிடம் சமர்ப்பித்தனர். இதையடுத்து பெரம்பலூர் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்