அடகு வைத்த பத்திரத்தை திருப்பி தருவதற்கு விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பண்ருட்டி கூட்டுறவு சங்க செயலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் லேன் 6-வது தெருவில் பண்ருட்டி வட்ட வீட்டுவசதி சங்கம் உள் ளது. இந்த சங்கத்தில் புலியூர் காட்டுசாகையை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன்(வயது 51) தனது நிலத்தின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார். பின்னர் இந்த கடனை அவர் தவணை முறையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கட்டி முடித்தார். இந்த நிலையில் ராமச்சந்திரன் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் தனது வீட்டு பத்திரத்தை திருப்பி தரும்படி கேட்டார். அதற்கு பத்திரத்தை திருப்பி தர வேண்டுமானால் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கூட்டுறவு சங்க செயலாளர் பாஸ்கரன் கேட்டதாக தெரிகிறது. பணத்தை கொண்டு வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறிய ராமச்சந்திரன் இது குறித்து கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். லஞ்சம் கேட்ட கூட்டுறவு சங்க செயலாளரை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவுசெய்தனர். இதையடுத்து போலீசாரின் ஆலோசனையின் பேரில் ராமச்சந்திரன்பண்ருட்டியில் உள்ள வீட்டு வசதி சங்க அலுவலகத்துக்கு சென்றார். அவருடன் கடலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின் ராஜா சிங் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், திருவேங்கடம், மாலா மற்றும் போலீசார் சாதாரண உடையில் அங்கே மறைந்து நின்று கொண்டிருந்தனர். பின்னர் ராமச்சந்திரன் ரூ.10 ஆயிரம் பணத்தை கூட்டுறவு சங்க செயலாளர் பாஸ்கரனிடம் கொடுத்தார். அதை வாங்கியபோது அங்கே மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் பாஸ்கரனை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கடலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாஸ்கரன் கடலூர் கூத்தப்பாக்கம் சண்முக சுந்தரம்பிள்ளை நகரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் இது போன்று வேறு யாரிடமும் லஞ்சம் வாங்கி இருக்கிறாரா? வேறு ஏதேனும் புகார் உள்ளதா? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவரை கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அடகு வைத்த பத்திரத்தை திருப்பி தருவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
• People judgement

சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
• People judgement

பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
• People judgement
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
• People judgement
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
• People judgement

Publisher Information
Contact
Peoplejudgement@gmail.com
9443966406
No, 1,Nehru street senguttai dharapadavedu katpadi taluk vellore district pin - 632007
About
தமிழ் செய்திகள்,
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn