இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள சிறப்பு சுருக்க திருத்தம் நடந்தது. இந்த சிறப்பு சுருக்க திருத்த முகாமில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. அதன்படி, வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். 13 சட்டமன்ற தொகுதிகளில் 15 லட்சத்து 32 ஆயிரத்து 885 ஆண்கள், 15 லட்சத்து 94 ஆயிரத்து 921 பெண்கள், 180 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்பட 31 லட்சத்து 27 ஆயிரத்து 986 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைவிட 62 ஆயிரத்து 36 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். குடியாத்தம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 75 ஆயிரத்து 475 பேர் இடம் பெற்றுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் 1,665 வாக்குச்சாவடி மையங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, மண்டல அலுவலகங்கள் உள்பட 1,700 மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இந்த பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என்று பார்வையிட்டு பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். 1,700 மையங்களிலும் பெயர் சேர்க்க (படிவம்-6), பெயர் நீக்கம் செய்ய (படிவம்-7), திருத்தம் செய்ய (படிவம்-8), சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய (படிவம்-8 ஏ) விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட பணிகள் நேற்று முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந் தேதி வரை செய்யப்பட உள்ளது. ஜனவரி 22-ந் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். என்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தெரிவித்தார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், உதவி கலெக்டர் கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்