சிறப்பு குறைதீர்வு திட்டத்தில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேலூரை அடுத்த இடையன்சாத்தில் நடந்தது. விழாவுக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆவின்தலைவர் வேலழகன், கணியம்பாடி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் எம்.ராகவன், பென்னாத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பி.அருள்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் வரவேற்றார். வேலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ப.கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினர். இதில், சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு 1,750 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 1,124 பேருக்கு விலையில்லா ஆடுகள், கோழிகள், 50 பேருக்கு புதிய ரேஷன் உள்பட 3 ஆயிரத்து 411 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 27 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவத ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், 55 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 32 ஆயிரத்து 555 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இந்த சிறப்பு குறைதீர்வு கூட்டத்தின் மூலம் 16 ஆயிரத்து 523 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளை மக்கள் தேடி செல்லும் நிலை மாறி தற்போது மக்களை தேடி அதிகாரிகள் வருகின்றனர். இத்தகைய சிறப்பு குறைதீர்வு கூட்டத்தின் மூலம் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், அவர்களின் வாழ்வாதாரம் உயரவும் வழிசெய்யப்படுகிறது. 2023-ம் ஆண்டு தமிழகத்தை இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறந்த மாநிலமாக மாற்றுவேன் என்று கூறி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை தீட்டினார். அதனை தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். தமிழகம் பல்வேறு துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. விலையில்லா சைக்கிள், மடிக்கணினி உள்பட 14 விலையில்லா உபகரணங்கள் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்க தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அண்டை மாநிலங்களில் இல்லாத பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அமைச்சர் பேசினார்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்