வேலூர் மாவட்டத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெள்ளை நிற ஒளிவரும் எல்.இ.டி பல்புகளின் கண் கூச வைக்கும் வெளிச்சத்தால், எதிரில் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி அவதிபடுகின்றனர். பெரிய விபத்துகள் ஏற்படும் முன்புநடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் ஏராளமாக பொதுமக்களிடயே பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் ஹெட்லைட்டில் அளவுக்கு அதிகமாக வெள்ளைநிற வெளிச்சத்தை வெளிப்படுத்தும் எல்.இ.டி பல்புகளை உபயோகப்படுத்தி வருகின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்களின் ஓட்டுநர்களின் கண்கள் கூசி பார்க்க முடியாததால் வழிதெரியாமல், அவ்வழியில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது மோதியும், அருகில் உள்ள மின்கம்பங்கள் அல்லது பள்ளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை இருந்து வருகிறது. பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதிகளில் விதிகளை மீறி வாகனங்களின் ஹெட்லைட்களில் பொருத்தப்பட்டுள்ள வெள்ளை நிற வெளிச்சத்தை அதிக அளவு வெளிப்படுத்தும் எல்.இ.டி பல்புகளை நீக்க சம்பந்தப்பட்ட வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் அவர்களும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்