தாசில்தார் காமாட்சியின் லஞ்சம் மோகத்தால் வேதனையில் வாடும் ஆற்காடு தாலுக்கா மக்கள்..!
தாசில்தார் காமாட்சியின் லஞ்சம் மோகத்தால் வேதனையில் வாடும் ஆற்காடு தாலுக்கா மக்கள்..!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக இருப்பவர் காமாட்சி இவர் அணைக்கட்டில் வருவாய் ஆய்வாளராகவும், வட்ட வழங்கல்  அலுவலராகவும் பணியாற்றியுள்ளார்  இவர் பணியாற்றும் இடங்களில் எல்லாம் கலெக்சன் காமாட்சி என்ற பட்டத்தை இவருக்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும் புரோக்கர் களால் வழங்கப்பட்டுள்ளதாக ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் பேசப்படுகிறது ஆற்காடு தாலுகாவிற்கு உட்பட்ட பட்டா மாறுதல் செய்ய, பட்டா வழங்க, வாரிசு சான்றிதழ் வழங்க, புறம்போக்கு குடியிருப்புப் பகுதிகளில் மின் இணைப்புக்கு சான்றிதழ் வழங்க என சான்றிதழுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு சான்றிதழும் புரோக்கர்கள் அல்லது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மூலம் தாசில்தார் காமாட்சி லஞ்சம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது மேலும் ஆற்காடு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் மாட்டு வண்டிகளிலும், டிராக்டர் மூலமாக இரவு நேரங்களில் பாலாற்றில் மணல் கனிமா வளங்களை சுருட்டுப்பவர்களிடமிருந்து மாட்டு வண்டியில் மணல் கனிமா திருடும் ஒருவர் மூலமாக தாசில்தார் காமாட்சி கலெக்சன் செய்து வருகிறாராம் இவர் தாசில்தாராக வந்த பிறகு வழக்கத்தை விட லஞ்சத்தை அதிகமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது, எங்க வேலை செய்ய வேண்டும் என்றாலும் பணம் கொடுத்தால் மட்டும் பணி உடனே நடக்கிறது தொலைபேசியிலேயே அனைத்து செட்டில் மட்டும் நடக்கிறதாம் மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் தாசில்தாருக்கு சேர்த்து வசூலித்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர், தாசில்தார் காமாட்சி மக்கள் வரிப்பணத்தில் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்கிறார் ஆனால் சிறு சிறு பணிகளுக்கு எல்லாம் பத்திரிக்கைகளில் போட்டோ கொடுத்து விளம்பரம் தேடுவது தாசில்தார் காமாட்சியின் வாடிக்கையாக உள்ளது எந்த தாசில்தாரும் அன்றாடம் செய்ய வேண்டிய பணிகளை வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிடுவது கிடையாது இந்த விளம்பரத்துக்கு குறிப்பிட்ட பத்திரிகையாளர்களுக்கு அவ்வப்போது பணம் கொடுப்பதால் இவரை பொறுத்தவரை அரசியல்வாதிகளையை மிஞ்சி விடுவாராம் மேலும் தாசில்தார் காமாட்சியை பொறுத்தவரையில் தாசில்தார் சீட்டில் உட்கார்ந்து எப்பொழுதும் வேலை பார்க்க மாட்டாராம் இவர் செய்கின்ற வேலை மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் பாராட்டி வருவதாக இவரே தனக்கு முத்திரை பதித்துக் கொண்டு பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளிடம் கூறிவருகிறாராம் இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் விசாரித்தபோது தாசில்தார் காமாட்சியை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருவதாக சொல்கிறாரே உண்மையா என்று கேட்டபோது எது கலெக்சன் செய்வதில் என்று நமட்ட சிரிப்புடன்  சொல்லுகின்றார் தாலுகா அலுவலகத்தை சேர்ந்தவர்கள் நமக்கு கிடைத்த தகவலை எழுதியுள்ளோம் இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆற்காடு தாலுகா பகுதி மக்களின் வேண்டுகோளாகும் சரி என நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்

கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்