திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பில் இருப்பவர் ஜோலார்பேட்டையை சேர்ந்த கலைவாணி இவர் பகல் கொள்ளையில் மிக களவாணி தனமாக லஞ்ச பணத்தை பெறுவாராம், இங்கு பொதுமக்கள் பத்திரப்பதிவுக்கு விபரம் அறிந்தவர்கள் கூட நேரடியாக சென்று பத்திரங்கள் பதிவு செய்ய முடியாதாம் சார்-பதிவாளர் அலுவலகத்தை சுற்றி உட்கார்ந்து இருக்கும் பத்திர எழுத்தாளர் மூலமாக சென்றால் மட்டுமே வேலைகள் நடக்குமாம் இல்லை என்றால் பத்திரத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் கண்டுபிடித்து பத்திரப் பதிவு செய்யாமல் மறுத்து விடுவாராம் நாட்றம்பள்ளி சார்பதிவாளர் அலுவலக பொறுப்பில் இருக்கும் கலைவாணி தனக்கு போய் சேரவேண்டிய லஞ்சப் பணம் ஒவ்வொரு பத்திர எழுத்தாளர்களிடம் தான் கொடுத்து வைத்திருப்பாராம் கலைவாணி அலுவலக பணி முடிந்து கடைசியாக வீட்டுக்கு போகும்போது சார்பதிவாளர் பொறுப்பு கலைவாணி ஒவ்வொரு பத்திரமும் எவ்வளவு பத்திரங்கள் பதிவு செய்தார் என பென்சிலில் குறிப்பிட்டு வைத்துக்கொண்டு அன்று வசூலான லஞ்சப் பணத்தை கொண்டு வைத்தவர்களிடம் வாங்கி செல்வாராம் சில சமயங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு இருக்கும் சமயங்களில் தனது உறவினர்களை வரவழைத்து லஞ்சப் பணத்தை அவர்கள் மூலம் வீட்டிற்கு பத்திரமாக கொண்டு போக சொல்வாராம், கலைவாணி என்று கூறுகின்றனர் அப்பகுதி மக்கள், இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் சார்பதிவாளராக பணி செய்து வந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு ஓய்வில் இருப்பதாக அலுவலக வட்டார தரப்பில் தெரிவித்துக் கொள்கிறார்கள் இதைப் பயன்படுத்தி கொண்டு சார்பதிவாளர் (பொறுப்பு) கலைவாணி மிக களவாணி தனமாக கையாளுகிறாராம் இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் மாவட்ட பத்திரப்பதிவு துறை அலுவலருக்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளாராம், எனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென நாட்றம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீரென சோதனை செய்தால் கணக்கில் வராத லஞ்சப் பணமும் சிக்கக் கூடும் என்று வேதனை தெரிவிக்கின்றனர்
நாட்றம்பள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பகல் கொள்ளையில் (பொ) கலைவாணி..!