ஜனநாயகத்தின் தூன் என்று போற்றப்படும் பத்திரிகையின் சுதந்திரத்தை பறித்த ஈரோடு மாவட்ட பி.ஆர்‌.ஓ அராஜகத்தை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான எஸ்.கே சுவாமி அவருக்கு பத்திரிக்கையாளர்களிடம் இருந்து பாராட்டுக் குவிகின்றன..
தமிழக தேர்தல் ஆணையம் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு தேர்தல் வாக்கு என்னும் மையங்களை பார்வையிட்டு செய்திகளை சேகரிக்க அடையாள அட்டை வழங்கும்படி உத்தரவு ஜனநாயகத்தின் தூன் என்று போற்றப்படும் பத்திரிகையின் சுதந்திரத்தை பறித்த ஈரோடு மாவட்ட பி.ஆர்‌.ஓ அராஜகத்தை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான எஸ்.கே சுவாமி அவருக்கு பத்திரிக்கையாளர்களிடம் இருந்து பாராட்டுக் குவிகின்றன..

தமிழக சட்டமன்ற பொதுதேர்தல் 2021 வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பல செய்தியாளர்களுக்கு வாக்குச்சாவடிகளில் சென்று பார்வையிட்டு செய்திகளை சேகரிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக ஒரு சில பிஆர்ஓக்கள் பத்திரிக்கையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப் படாமல் இருந்த நிலையில்  ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் பத்திரிக்கையாளர்களுக்கு 
வாக்குச் சாவடி மற்றும் ஓட்டு எண்ணிக்கை மையம் உள்ளிட்ட இடங்களில் செய்திகளை சேகரிக்க பத்திரிக்கையாளர்களுக்கு போதிய வசதி செய்து தராத மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உடனே அது குறித்த அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் மற்றும் தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான டாக்டர். எஸ்.கே சுவாமி அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்திய பிரதா சாகு உத்தரவு பிறப்பித்து உள்ளார். 

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு சாவடி மையங்களில் சென்று பார்வையிட்டு செய்திகளை சேகரிக்க நிருபர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தரப்படும் அங்கீகார அனுமதி சீட்டு அடையாள அட்டை ( Authority Letter) தரப்பட வில்லை என்ற புகார்கள் பத்திரிக்கையாளர்களால் முன்வைக்கப்பட்டது, அதை நிரூபிக்கும் வகையில் புகார்தாரரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர். எஸ்.கே சுவாமி அவர்கள் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இணையதளம் மூலமும் சமீபத்தில் வீடியோவில் ஈரோடு மாவட்ட  செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகளான சதீஷ் குமார் மற்றும் சதீஸ் ஆகியோர் நிருபர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட முறை பத்திரிக்கை மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயலாக இருப்பதற்கு ஒரு மாபெரும் சாட்சியாக அமைந்துள்ளது என்று 

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர். எஸ்.கே சுவாமி அவர்கள் அளித்த புகார் மனு மற்றும் ஈரோடு மாவட்ட செய்தி மக்கள்  தொடர்பு அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக நடத்திய வீடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட தமிழக தலைமை தேர்தல் அலுவலக அதிகாரிகள் இது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்ததோடு வாக்கு எண்ணிக்கை மையங்களில் பத்திரிக்கையாளர்கள் சென்று பார்வையிட்டு  செய்தி சேகரிக்க  எந்தவித பாராபட்சமும் பார்க்காமல் உரிய அனுமதி அடையாள அட்டை  வழங்குவதையும் உறுதி படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்,

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் அல்லது ஒரு தலைபட்சமான செயல்பாடுகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு காரணிகளால் பத்திரிக்கையாளர்களுக்கு  இந்திய தேர்தல் ஆணையத்தால் இந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021ற்க்கு வழங்கப்பட வேண்டிய வாக்கு எண்ணிக்கை மையங்களில் சென்று பார்வையிட்டு செய்தி சேகரிக்க வழங்கப்படும் அங்கீகார அடையாள அட்டை இதுவரை ஒரு சிலருக்கு வழங்கப்பட்ட நிலையில் மேலும் மீதமுள்ள பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை என்றால் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சித் தலைவர்களை நேரடியாக அணுகி பெற்றுக் கொள்ளுமாறு தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து பத்திரிக்கையாளர்களின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப் பட்ட நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மாவட்டத்தில் கீழ் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார் இந்த ஆணையை பெற்றுத்தந்த பத்திரிக்கை சுதந்திரத்தை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான எஸ்.கே சுவாமி அவர்களுக்கு அனைத்து பத்திரிக்கையாளர்களின் சார்பாகவும் பாரத இதழின்  சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் 





கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்