+2 அரசு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில மற்றும் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்பு
கொரோனா நோய் தோற்று பரவல் தீவிரம் காரணமாக தமிழகத்தில் +2 அரசு பொதுத்தேர்வை ஒத்திவைப்பு, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்பு
தமிழகத்தில் மே-5ஆம் தேதி முதல் நடைபெற உள்ள +2 அரசு பொதுத்தேர்வுகளை மாணவர் நலன் கருதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ள தமிழக அரசின் அறிவிப்பினை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
இது குறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில மற்றும் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் அறிக்கையில் கூறியிருப்பதாவது
கொரோனா நோய் தொற்று பரவல் தீவிரம் காரணமாக மத்திய அரசு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. மேலும் 10ஆம் வகுப்பு தேர்வுகளை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. எனவே மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மே-5ஆம் தேதி முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென தமிழக அரசை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது. பல்வேறு தரப்பினர் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு +2 மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்டுவதாகவும் +2செய்முறை தேர்வுகள் மட்டும் நடைபெறும் என அறிவித்துள்ளதை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் வரவேற்கின்றோம்.