வேலூர் மாநகராட்சி 2வது மண்டல சுகாதார அலுவலர் கே.சிவகுமார் பழைய பேருந்து நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரம். உத்தரவுபடி வேலூர் மாநகராட்சி ஆணையாளர் சங்கரனின் அறிவுறுத்தல் பேரில் வேலூர் பழைய பேருந்து நிலையப் பேருந்தில் பயணம் செய்யும் பயனாளிகளுக்கு, மேலும் வெளியூர் செல்ல காத்துக் கொண்டிருக்கும் பயனாளிகளுக்கும் வேலூர் மாநகராட்சி 2வது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் கே.சிவகுமார் தலைமையில் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பரவலை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு ஒலிபெருக்கி மூலம் பேருந்துகளில் பயணம் செய்யும் பயனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் மேலும் முக கவசம் அணியாமல் பயணம் செய்து வந்தவருக்கு 200 ரூபாய் வீதம் 5 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூபாய் 1000 வசூலிக்கப்பட்டது. வேலூர் மாநகராட்சி 2வது மண்டல மேல் பார்வையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உடனிருந்தனர்