உலகையே உலுக்கி போட்டுக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை இரவு பகலாக கண்விழித்து சரியாக சாப்பிடாமல் மக்கள் பணியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் காவலர்களுக்கு கைகழுவும் திரவம், முககவசம் வழங்கி ரெட்கிராஸ் விழிப்புணர்வு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால் பணியில் இருக்கும் காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் கைகழுவம் திரவம் மற்றும் முககவசம் வழங்கி விழிப்புணர்வினை ஏற்படுத்தியது காட்பாடி ரெட்கிராஸ் சங்கம். காட்பாடி விருதம்பட்டு சாலையில் பணியில் இருக்கும் காவலர்கள், மற்றும் அவ்வழியாக செல்லும் பொது மக்கள் அனைவரும் தங்களது கைகளை சுத்தம் செய்து கொரோனா வைரஸ் பாதிப்பினை தடுக்கும் நோக்குடன் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர் சி.இந்தர்நாத் கைகழுவும் திரவம் மற்றும் முககவசம் ஆகியவற்றை வழங்கினார் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், தலைமை தாங்கினார் பொருளாளர் வி.பழனி துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். குடும்ப அட்டை தாரர்கள் சமூக இடைவெளியினை கடைபிடிக்குமாறு விழிப்புணர்வு மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் காட்பாடி காந்திநகர் நியாயவிலை கடைக்கு வரும் குடும்ப அட்டை தாரர்கள் சமூக இடைவெளியினை கடைபிடிக்குமாறு ஒழுங்குபடுத்தினர் இப்பணியில் காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் வி.பழனி அவை துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் காட்பாடி விருதம்பட்டு சாலையில் பணியில் இருக்கும் காவலர்கள், மற்றும் அவ்வழியாக செல்லும் பொது மக்கள் அனைவரும் தங்களது கைகளை சுத்தம் செய்து கொரோனா வைரஸ் பாதிப்பினை தடுக்கும் நோக்குடன் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர் சி.இந்தர்நாத் கைகழுவும் திரவம் மற்றும் முக்கவசம் ஆகியவற்றை வழங்கியபோது எடுத்தப்படம் உடன் காட்பாடி ரெட்கிராஸ் சங்க செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் வி.பழனி ஆகியோர்.