திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நெடுஞ்சாலை | ஆணையம் மற்றும் எல் அன்டி சுங்கசாவடி இணைந்து கொனோரா வைரஸ் தடுப்பு ஊரடங்கு நிலையில் திருநங்கைகளின் அன்றாட உணவு தேவைகளுக் காக 5 கிலோ அரிசி மற்றும் காய்கறி தொகுப்பை 50 திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.ப.சிவன் அருள் அவர்கள் வழங்கி ஊரடங்கு நாட்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார்கள். உடன் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், தேசிய நெடுஞ்சாலை ஆணையபொறியாளர் கிருஷ்ணகிரி ஜெயக்குமார், எல் அன்டி நிறுவன சாலை பாதுகாப்பு மேலாளர் திரு.ஜான்சன் , நெக்குந்தி சுங்கசாவடி மேலாளர் சந்தே வஹாப் பாபு உள்ளனர்.