திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 100 சதவீத ஊரடங்கு
வாணியம்பாடியில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 100 சதவீத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையி லிருந்து வந்தது. மேலும் 15.4.2020 முதல் ஊரடங்கு உத்தரவு வரும் மார்ச் 3ஆம் தேதி வரை நீடிக்கப் பட்டுள்ளது. அதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக வர வாய்ப்புள்ள சந்தே கத்தின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு சிவன் அருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு விஜயகுமார் அவர்கள் வருவாய் கோட்டாட்சியர் திருமதி காயத்ரி சுப்பிரமணி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் வட்டாட்சியர் சிவப் பிரகாசம் மற்றும் வாணியம்பாடி வணிகர்கள் மருந்தகம் நடத்துனர்கள் காவல்துறையினர் கலந்தாலோசித்து 16 .4. 2020 அன்று முதல் வரும் மார்ச் மூன்றாம் தேதி வரை 100 சத வீத ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்குமெனவும் பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள் மருந்துகள் பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தேவைப் படுமாயின் வாணியம் பாடியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கண்ட் ரோல் ரூமில் தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள் அறிமுகப் படுத்தியுள்ளனர். அதை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீட்டி லிருந்தபடியே பெற்றுக் கொள்ளலாம் என்று வழிவகை செய்துள்ளனர் மேலும் வாகனங்களில் காய்கறிகள் அடங்கிய ஒரு பேக் 100 ரூபாய் வீதம் விற்பனை செய்து வருகின்ற னர். இதனால் வாணியம் பாடியில் 100% ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.